இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 01, 2013

கணவன் விவாகரத்து கோரினால் சமூக சீரழிவும், மனைவி விவாகரத்து கோரினால் சமுதாயத்தில் செல்வச் செழிப்பும் ஏற்படும்!

இந்தியத் திருமணங்களில் சிக்கல் ஏற்படுவது இப்போது சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம்.  அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கும் பல சட்டங்கள் குடும்பங்களை சீரழித்து குடும்பம் குடும்பமாக நீதிமன்றங்களில் விவாகரத்திற்காக வரிசையில் நிற்க வைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

இதுபோன்ற சூழலில் பல வித குடும்ப அழிப்பு  சட்டங்கள் சப்தமில்லாமல் நிறைவேற்றப்பட்டு சந்தைக்கு வியாபாரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.  இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி நடத்தை கெட்டவளாக இருந்தாலும் அல்லது கணவனின் குடும்பத்தை பொய் வழக்குப் போட்டு சீரழித்தாலும் கணவன் விவாகரத்து கேட்டால் இந்த ஜென்மத்தில் கணவனுக்கு விவாகரத்து கிடைக்காது. 

ஆனால் மனைவி கள்ளக்காதலனோடு சல்லாபம் செய்வதை கணவன் கண்டித்தால் அது பிடிக்காத மனைவி அவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்தை அணுகி கணவன் கொடுமை செய்வதாகக் கூறி விவாகரத்தை எளிதாக பெற்றுக் கொண்டு கைச் செலவிற்கு ரொக்கப் பணத்தையும் எளிதாக வாங்கிச் செல்லலாம்.  இதுதான் இன்றைய நிலவரம்.  அதனால்  கணவன் விவாகரத்துக் கோரினால் அது சமூக இழுக்கு, மனைவி விவாகரத்து கோரினால் அது சமுதாயத்தின் செல்வச் செழிப்பு என்று சொல்லலாம் அல்லவா?

மனைவி பொய் வழக்குப் போட்டு கணவனின் தாய்  மற்றும் சகோதரிகளை சிறையில் அடைத்தாலும் அது குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ இழுக்கு கிடையாது.  அதனால் கணவன் கோரும் விவாகரத்து கொடுக்க முடியாது,  அவன் அந்த மனைவியுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பை பாருங்கள்.  இதை படித்துவிட்டு மதுரை கிளை நீதிமன்றத்தின் செய்தியை தொடர்ந்து படியுங்கள். 
High Court of Judicature at Madras
23-12-2011
Judge(s)

JUSTICE K. MOHAN RAM & JUSTICE G.M. AKBAR ALI
Parties
P. Abirami Versus D.E. Tamilarasan
Advocate(s)
For the Appellant: D. Ramalingam for Sudha Ramalingam, Advocates.
For the Respondent: M. Venkatachalapathy, Senior Counsel for M. Kempraj, Advocate.
Hindu Marriage Act, 1955 (25 of 1955), Section 13 – Mental Cruelty – Decree of divorce – Grant of - Validity of – Decree of divorce granted in favour of husband by Trial Court on account of mental cruelty – However, no specific acts, which amounted to mental cruelty, have been pleaded with material particulars – Only general allegations made in petition for divorce – Allegation that wife did not behave as a dutiful wife also not substantiated – Moreover, allegations that husband was not informed about pregnancy of wife also proved to be false – Acquittal of mother and sister in Criminal case filed by wife would not prove that Complaint being falseThus, allegation of mental cruelty not established – Decree of divorce granted on ground of mental cruelty, set aside.



மதுரை : "விவாகரத்து, கேட்டதும் கிடைக்கும் பொருள் அல்ல. விவாகரத்து மீதான பாதிப்பின் தாக்கம், பெண்கள் மீது அதிகம் இருக்கும்; சமூகத்தில் களங்கம் ஏற்படுத்தும்; அப்பாவி குழந்தைகளை பாதிக்கும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை, கோரிப்பாளையம் சரவணகுமார், "என் மனைவி பரமேஸ்வரி கொடுமைப்படுத்துகிறார். அவரது தாய் வீட்டில் உள்ளார். 1 லட்சம் ரூபாய் வாங்கி, ஒருமித்த விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டார். விவாகரத்து வழங்க வேண்டும்' என, குடும்பநல கோர்ட்டில் மனு செய்தார். பரமேஸ்வரி, "சரவணகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை. ஒருமித்த விவாகரத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. என்னை ஏமாற்றி, கையெழுத்து வாங்கினார். இதற்கு வரதட்சணை பிரச்னை தான் காரணம்' என, மனு செய்தார்.
சரவணகுமாரின் மனுவை, குடும்பநல கோர்ட், 2010ல் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி, என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: விவாகரத்து, கேட்டவுடன் கிடைக்கும் பொருள் அல்ல. விவாகரத்து மீதான பாதிப்பின் தாக்கம், பெண்கள் மீது அதிகம் இருக்கும்; சமூகத்தில் களங்கம் ஏற்படுத்தும்; அப்பாவி குழந்தைகளை பாதிக்கும். விவாகரத்து வழங்க என, தனி விதிகள் உள்ளன. அதை மீற முடியாது. உடல் ரீதியாக அல்லாமல், மன ரீதியாக மனைவி கொடுமைப் படுத்தியதாக, மனுதாரர் கூறுகிறார். சிறு, சிறு சச்சரவுகளை கொடுமையாக கருத முடியாது. சாட்சிகளை பார்க்கும் போது, மனுதாரர் சாதாரண விஷயத்தை ஊதி, பூதாகரமாக்கி உள்ளார். கொடுமைப் படுத்தியதற்கான நிகழ்வுகளை, ஆதாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. மனுதாரர், ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்து, விவாகரத்து செய்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். தண்ணீர் பருக விருப்பமில்லாத குதிரையை, கட்டாயப்படுத்தி பருக வைக்க முடியாது. ஒருமித்த முறையில் விவாகரத்து செய்தாலும், சில காலம் காத்திருக்க வேண்டும். ஒருமித்த விவாகரத்திற்கு சம்மதம் பெற, மனுதாரர், செல்வாக்கை பயன்படுத்தி இருக்கக் கூடாது. இதில் மனுதாரர், மனைவியை ஏமாற்றி கையெழுத்து வாங்கியுள்ளார். மனைவியின் குற்றச்சாட்டை, மனுதாரர் மறுக்கவில்லை. குடும்ப நல கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.